Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Latest post

பிரித்தானியாவில் தமிழின படுகொலைக்கு நீதி கோரி திரண்ட மக்கள்!

பிரித்தானியாவில் தமிழின படுகொலைநாளில் நீதி கேரி ஆர்ப்பாட்டம்!முள்ளிவாய்க்கால் படுகொலை தமிழின படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவு நாளான நேற்று (18) பிரித்தானியாவில் நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஈடுபட்டுள்ளார்கள். பிரித்தானியா பாராளுமன்றத்திற்கு முன்பாக ஒன்று கூடிய புலம்பெயர் தமிழ் மக்கள் தமிழின படுகொலைக்கு நீதி கேரி தங்கள் கவனயீர்ப்பினை வெளிப்படுத்தி உள்ளார்கள்

உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி!

உயிர்நீத்த உறவுகளுக்காக  நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15ஆம் ஆண்டு நினைவாக இன்று (18.05.2024) அதிகாலை நந்திக் கடலில் மலர் தூவி, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினர் இன்று சனிக்கிழமை நந்திக்கடலில் மலர்தூவி சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்…

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய சர்வதேச மன்னிப்பு சபை செயலாளர் நாயகம்!

2009 ஆம் ஆண்டு இறுதிப்போர் காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard கலந்துகொண்டு இறுதிபோரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். 18.05.2024 இன்று முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு…

இறுதிபோரில் கணவனை இழந்த பெண் பொதுச்சுடரினை ஏற்றினார்!

முள்ளிவாய்க்கால் மண்ணிலே தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டு தமிழினப் படுகொலை இடம்பெற்று இன்றுடன் 15 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது இந்த வகையிலே முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றதில் 10:30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது முள்ளிவாய்க்கால் மண்ணிலே முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் பொதுக்…

சர்வதேச மன்னிப்பு சபை முல்லைத்தீவில் சந்திப்பு!

சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம்  Agnès Callamard இன்று 17.05.24 முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் முல்லைத்தீவு நகரப் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத் தலைவிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு இலங்கையில்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம்! சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard இன்று (16)  நாட்டிற்கு வருகை தந்தார்.  சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard-இன் தெற்காசியாவிற்கான முதல் விஜயம் இதுவாகும். Agnès Callamard எதிர்வரும்…

நாட்டை அதளபாதாளத்தில் இருந்து மீட்டவர் ரணில் என அனைவரும் சொல்கிறார்கள்!

நாட்டின் பொருளாதார சவாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் அரசியல் சவாலாக எடுத்துக் கொள்ளாமல், நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்க்காக ஏற்றுக்கொண்டது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார் . ஹம்பாந்தோட்டை அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை விளையாட்டரங்கில் கடந்த (10) அன்று ஆரம்பமான ‘ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் பதினான்காவது கட்டத்தின்…

முள்ளியவளை ஐயனார் குடியிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது!

2009 ம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல்  மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது. அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள் பொருளாதார…

யாழ்-தமிழ்நாடு கப்பல் சேவை எதிர்வரும் 17 ஆம் திகதி!

தமிழ்நாடு நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு நேற்று 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக இருந்த கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 14ஆம் திகதி முதல் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ‘செரியாபாணி’ என்ற பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த…

யாழில் முல்லை மோடியைஅதிகமாக கலந்து ‘கூத்துருவ நாடகம்’ என பெயர் வைத்துள்ளார்கள்!

முள்ளியவளை கோவலன் கூத்து இசை மரபிலும் ஆட்டமரபிலும் செறிவுகொண்ட ஒரு மிகச்சிறந்த கூத்து-பல்கலை இசைத்துறை தலைவர் தவநாதன் றொபேட்தெரிவித்துள்ளார்! முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன்ஆலய பொங்கல் நிகழ்வினை முன்னிட்டும்,காட்டுவிநாயகர் ஆலய வைகாசி பொங்கல் நிகழ்வினை முன்னிட்டும் முள்ளியவளை கலைஞர்களால் நடத்தப்பட்டு வரும் கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்து முல்லைமோடி  ஒருங்கிணைப்பு குழுவின்…